வெள்ளத்தில் மூழ்கிய வாழைகள்.. சரிந்த விலை.. கவலையில் விவசாயிகள்
வாழை விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக கடும் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை: பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஏராளமான வாழைகள் நீரில் மூழ்கி விவசாயிகளை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த ஆண்டு பருவமழை சீக்கிரமாகவே தொடங்கியது. இதனால் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. தமிழக அணைகளும் பெரும்பாலும் நிறைந்துள்ளன. மேலும் பவானி ஆற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்திருந்த வாழைகள் நீரில் மூழ்கின. இதனால் மேட்டுப்பாளைய பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இதனால் காரமடை நால்ரோடு பிரிவில் இயங்கவிரும் மேட்டுப்பாளையம் மார்க்கட்டுக்கு அதிக அளவில் வரும் வாழைத்தார்களும் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட் பரபரப்பின்றியும் கூட்டமின்றியும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இருக்கும் வாழைத்தார்களுக்கும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.
வரத்து குறைந்தால் பொதுவாக விலை உயரும் நிலை போய், தற்போது வரத்தும் குறைந்து விலையும் குறைந்துள்ளது. ஏற்கனவே தண்ணீரில் வாழைகளை பறிகொடுத்த விவசாயிகள், வாழை விலையும் குறைவாக விற்க நேரிடுவதால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications