மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை.. 35,400 கன அடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தம் 35,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் 16 கண் மதகு வழியாக 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிகை விடுத்து வருகின்றனர்.
மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டி எம்.சி.உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் 18,000 கனஅடியில் இருந்து மாலை 6 மணி அளவில் 25,000 கன அடியாக திறக்கப்பட்டது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் 16 கண் மதகு வழியாக 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து 3 நாட்களாக அதே அளவு நீடித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications