மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு- 109அடியை தாண்டியது! 1.40 லட்சம் கன அடி நீர்வரத்து!
மேட்டூர்: தமிழ்நாட்டில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 103.13 அடியாக இருந்தது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டியது. தற்போது சில மணிநேரங்களிலேயே 2 அடி உயர்ந்து 109 அடியை எட்டியிருக்கிறது. மேட்டூர் அணைக்கான காவிரி நீர் வரத்து 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 77 டிஎம்சியாகும்.
கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவை கடந்த ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் காவிரியின் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது. காவிரியின் துணை நதியான கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கபினியும் நிரம்பியது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,31,234 கன அடிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35,000 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. மொத்தமாக காவிரியில் 1,66,234 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எல்லையான ஒகேனக்கல்லுக்கு இன்று காலை காவிரி நீர் வரத்து வினாடிக்கு 1,55,000 கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் 100 அடி உயர பாறைகள் அனைத்தும் காவிரி வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் இன்று 13-வது நாளாக தடை தொடருகிறது.
ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.34 லட்சம் கன அடி நீர்வரத்து உள்ளது. இதனால் நேற்று இரவு 103.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 107 அடியை தாண்டியது. அடுத்த சில மணிநேரங்களிலேயே மேலும் 2 அடி உயர்ந்து தற்போது 109 அடியை தாண்டியிருப்பது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். தற்போதைய நீர் இருப்பு 77 டிஎம்சி. தற்போதைய நீர்வரத்து தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையும் நிரம்பிவிடும். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடிநீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பி வருவதால் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறந்துவிடப்பட இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications