மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது... விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையின் நீர் வரத்து வேகமாக குறைந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சேலம்: மேட்டூர் அணையின் நீர் வரத்து வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகம் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்தனர்.

Mettur Dam's water flow decreases

இந்த அவலநிலையில் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றும் விதமாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வறட்சியில் மேட்டூர் அணை வறண்டுவிட்ட நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகலீல் நல்ல மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது.

இந்நிலையில் அதன் நீர் வரத்து குறைந்துள்ளது. அதாவது 21,973 கனஅடியாக இருந்த நீர் வரத்து தற்போது 17.945 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம 66.38 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 29.67 டிஎம்சியாக உள்ளது.

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+