திருவாரூரில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு
திருவாரூரில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: திருவாரூரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 19ம் தேதி திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த விழா அழைப்பிதழில் 3 திமுக எம்எல்ஏக்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதில், திருவாரூர் எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆகியோரின் பெயர்கள் வாழ்த்துரைப் பகுதியில் அச்சிடப்பட்டுள்ளன. இவர்கள் மூவருக்கு அழைப்பு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவான திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications