சத்துணவு முட்டை குறித்து பொய் மூட்டைகளை அவிழ்க்கிறார் மு.க.ஸ்டாலின்...முதல்வர் எடப்பாடியார் விளாசல்
சத்துணவு முட்டை உள்ளிட்ட விவகாரங்களில் தினந்தோறும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதாவது ஒரு பொய் தகவலை கூறிவருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடியுள்ளார்.
தூத்துக்குடி: தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும் அதிமுகவின் ஒரு தொண்டரை கூட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினால் தொட்டு பார்க்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ரூ. 389 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
உலகம் சுற்றும் வாலிபன்' படம் தடைகளை தாண்டி தூத்துக்குடியில் திரையிடப்பட்டது. போஸ்டர்கள் ஒட்டப்படாமலேயே மாபெரும் வெற்றி பெற்றது. சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும்.
2018-19-ம் ஆண்டில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது குடிநீர் திட்டம் ரூ. 282 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது.
முட்டை விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். சத்துணவில் முட்டை வழங்குவது ஒருநாளும் நிறுத்தப்படாது. பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலின், அ.தி.மு.க.வின் ஒரு தொண்டனைக்கூட தொட்டுப்பார்க்க முடியாது.
தினமும் ஏதாவது ஒரு பொய்யை ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். வல்லநாடு அருகே அகரத்தில் தடுப்பணை கட்டப்படும். தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.26,932,35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications