எம்.ஜி.ஆரின் 99 - வது பிறந்த நாள் விழா: ஜெயலலிதா இன்று பங்கேற்பு
சென்னை: எம்.ஜி.ஆரின், 99 -வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தலைமைக் கழகம் வருகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.

அங்குள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 99-வது ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிடுகிறார். தேர்தல் வர உள்ளதால், தொண்டர்கள் மத்தியில், அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரை வரவேற்க, கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாய பிரிவு மீனவர் பிரிவு மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications