எம்.ஜி.ஆர். வளர்ப்பு மருமகன் விஜயனை 'முடிக்க' போலீஸ் கருணா போட்டுத் தந்த 'ஸ்கெட்ச்' இதுதான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்.ஜி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்த வளர்ப்பு மருமகன் விஜயனை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள் பானுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பானுவுக்காக விஜயனை கூலிப்படையை ஏவி ஸ்கெட்சு போட்டு படுகொலை செய்ய வைத்தது போலீஸ்காரர் கருணா.
எம்.ஜி.ஆர். விஜயன் கொலையை எப்படி நடத்த வேண்டும் என "போலீஸ்" கருணா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் இது...இப்படித்தான் விஜயன் கொலை செய்யப்பட்டார்...
- 2008-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி அபிராமபுரத்தில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார் விஜயன்.... அப்போது விஜயனுடன் செந்தில் என்ற பொறியாளர் காரில் இருக்கிறார்...

- விஜயன் கிளம்பும் போது கூலிப்படையை சேர்ந்த தீனா கார்த்தி அவரது காரை பைக்கில் பின் தொடர்ந்தார்.
- அதே நேரத்தில் கோட்டூர்புரத்தில் மற்றொரு காரில் கூலிப்படையைச் சுரேஷ், டிரைவர் சீட்டில் உட்கார்ந்தபடி வெயிட்டிங்...
- கோட்டூர்புரம் வளைவில் விஜயன் கார் வர... சுரேஷுக்கு தீனா கார்த்தியிடம் இருந்து சிக்னல் வருகிறது...
- விஜயன் கார் நெருங்கி வர கூலிப்படை சுரேஷ் வேண்டுமென்றே அந்த காரின் மீது வேகமாக ஓட்டி சென்று 2 முறை மோதுகிறார்....
- கார் இடிக்கப்பட்ட கோபத்தில் சட்டென விஜயன் காரை நிறுத்திவிட்டு கோபத்துடன் கீழே இறங்குகிறார்... அவருடன் காரில் வந்த செந்திலும் இறங்குகிறார்..
- காரை வேண்டுமென்றே இடித்த சுரேஷ், விஜயனுடன் தகராறு செய்வது போல நடித்துக் கொண்டிருக்கிறார்..
- விஜயன் காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த தினேஷ் கார்த்தி சரியாக சம்பவ இடத்துக்கு வந்து சேருகிறார்...
- வந்த வேகத்தில் விஜயன் தலையில் இரும்புத்தடியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தி கிரேட் எஸ்கேப்.. .சம்பவ இடத்திலேயே சுருண்டு உயிரிழக்கிறார் விஜயன்.
- இத்தனை சம்பவத்தையும் சற்று தொலைவில் இருந்தபடி முழுவதுமாக கண்காணித்த போலீஸ் கருணாவுடன்தான் சுரேஷூம் தினேஷ் கார்த்திக்கும் தப்பினர்.
- செந்திலும் அப்பகுதி வழியாக சென்ற சிலரும் நடந்த சம்பவத்தை முழுமையாக நேரில் பார்த்த சாட்சிகள்.
இப்படித்தான் போலீஸ் கருணா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் அரங்கேறியது...எம்.ஜி.ஆர். விஜயன் படுகொலையானார்...
விளைவு... எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் கொலையாளியாகி ஆயுள் தண்டனைக் கைதியானார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications