செவ்வாய்கிழமை அசைவம் சாப்பிடாத புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்: ஒரு மீனவரின் அனுபவம்
சென்னை: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு விரால்மீன் குழம்பு பிடித்தமான உணவாம். இவரது வீட்டுக்குத் தேவையான மீன்களை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர்தான் அவரது வீட்டுக்குப் போய் கொடுத்து விட்டு வருவார்களாம்.
இன்றைக்கும் அந்த மீன் வியாபாரியின் குடும்பத்தினர் சைதாப்பேட்டையில் மீன் விற்பனைக் கடை நடத்தி வருகின்றனர். அவரது கடையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் இருக்கிறது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த புகைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்து அதைப் பற்றி கேட்டால் புரட்சித்தலைவர் உடனான நினைவுகளை ஆர்வத்துடன் கூறுகிறார் அந்த மீனவர்.

உணவளிக்கும் வள்ளல்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விஷயத்தில் விருந்து என்பதில் ஒரு தனித்தன்மை காணப்படும். அவரது வீட்டுக்கு போகிறவர்கள் சாப்பிடாமல் வரமுடியாது. அவருடன் எந்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பும் விருந்து கொடுப்பது அவர் பழக்கம்.

விரால் மீன்குழம்பு
குறிப்பாக கேரளா பாணியில் சமைக்கப்பட்ட விரால் மீன் குழம்பு மற்றும் வஞ்சிரம் கருவாடு எம்.ஜி.ஆர் வீட்டு விருந்தில் நிச்சயம் இடம்பெறும் என்கின்றனர் அவரது வீட்டு உணவை ருசித்தவர்கள்.

எம்.ஜி.ஆருக்கு மீன் கொடுத்த வியாபாரி
எம்.ஜி.ஆர். வீட்டு மீன் சமையலுக்கு தொடர்ந்து மீன்கள் அளித்து வந்த வியாபாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்.கே.சேகர் என்பவர் இன்றைக்கும் சைதாப்பேட்டையில் மீன் வியாபராம் செய்து வருகிறார். இவரது கடையின் மிகப்பெரிய கவர்ச்சி அங்கு மாட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படம் என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர். அந்தப் புகைப்படத்தில் சேகரின் தந்தையார், கண்ணன் மற்றும் தாயார் ஆகியோர் எம்.ஜி.ஆருடன் இருக்கின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு பிடித்த மீன்
எம்.ஜி.ஆர் உடன் தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நட்பு, பாசம் பற்றி நினைவு கூறும் சேகர், இப்போது மீன் கடையை சகோதரி தனமுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். "நாங்கள் எம்.ஜி.ஆர்-க்கு 1967ஆம் ஆண்டு முதல் மீன்கள் சப்ளை செய்து வந்தோம். நான் விரால் மீன் எடுத்துச் சென்று அவருக்காக அதனை சுத்தம் செய்து கொடுப்பேன்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
"என்னுடைய தந்தையை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களில் என் தந்தையை சைதாப்பேட்டை தொகுதிக்கு நிறுத்தினார். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தாலும் என் தந்தை 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார்".

சகோதரியின் திருமண செலவு
தேர்தலில் போட்டியிடுவதற்காக வீட்டைத் தன் தந்தை அடமானம் வைத்திருந்தபோது எம்.ஜி.ஆர் மீட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் சகோதரி பாக்கியலட்சுமியின் திருமண செலவுகளை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார்.

செவ்வாய்கிழமைகளில் சைவம்
செவ்வாய்க்கிழமைகளில் புரட்சித்தலைவர் இறைச்சி உணவு எடுத்துக் கொள்ள மாட்டார்" என்று கூறிய சேகர் எம்.ஜி.ஆரை ‘பெரியப்பா' என்றுதான் அழைப்பாராம்.

பழைய மீன் குழம்பு
முதல் நாள் சமைத்த மீன் குழம்பை மறுநாள் காலை உணவில் எடுத்துக்கொள்வதுதான் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கும் என்று சேகரின் சகோதரி தனம் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவில் மருத்துவம்
நான் இருதய நோயால் அவதிப்பட்டபோது அமெரிக்காவில் மருத்துவம் செய்து விடலாம் என்று எம்.ஜி.ஆர் உறுதியளித்தார். ஆனால் 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அதாவது எங்கள் தந்தை இறந்து 11 நாட்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். மறைந்தார்" என்று கூறினார் தனம்.

பொங்கல் நாளில் சந்திப்பு
எம்.ஜி.ஆர்-உடன் ஒவ்வொரு பொங்கலின் போதும் சந்திப்பு மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்வோம். இன்றும் நல்லபடியாக மீன் விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம், ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுகளை மறக்கமுடியாது" என்று சேகர் கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications