Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பேஸ்புக்” மூலம் காதல் வளர்த்து மாணவியைக் கடத்திய ராணுவ வீரர் கைது!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் முகநூல் மூலம் காதலித்து கல்லூரி மாணவியைக் கடத்திய இராணுவ வீரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் முத்து. இவர் ஹைதராபாத்தில் உள்ள தரைப்படை இராணுவ பிரிவில் வீரராகப் பணி புரிகிறார். இவரது மனைவி ஷீலா திருப்பத்தூரில் வசித்து வருகிறார்.

Military man arrested in kidnap case

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கொலசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் பிரியதர்ஷினி. இவர் திருச்செங்கோடு அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

பிரியதர்ஷினிக்கும், முத்துவுக்கும் கடந்த ஆறு மாதங்களாக முகநூல் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி பிரியதர்ஷினியை ராணுவ வீரர் முத்து கடத்திச் சென்றதாகக் பிரியதர்ஷினியின் தந்தை கோபால் அளித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் பாலக்கோடு பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ வீரர் முத்துவை போலீசார் கைது செய்து அவருடன் இருந்த பிரியதர்ஷினியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+