For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயம் காட்டும் கொரோனா! பள்ளிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன சொல்கிறார்?

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு : கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் கட்டுபாடுகள் குறித்து இதுவரை, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை அவ்வாறு வந்தால் அதற்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் 124 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவத் துறை அறிக்கையில், 24 மணி நேரத்தில் 1,063 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 497 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளதாகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 190 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை உதயநிதி தான் ஆளப்போகிறார்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..! தமிழகத்தை உதயநிதி தான் ஆளப்போகிறார்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

பள்ளிகளில் கட்டுபாடுகள்?

பள்ளிகளில் கட்டுபாடுகள்?

பள்ளிகளில் கட்டுபாடுகள் குறித்து இதுவரை, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை அவ்வாறு வந்தால் அதற்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பள்ளிக் கல்வியின் ஊராட்சி மன்றங்களில் பங்கும் பொறுப்பும் என்கிற தலைப்பில் 100 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நடைபெறும் இரண்டு நாட்கள் பயிற்சி பணிமனையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி


அப்போது பேசிய அவர், கல்வி உரிமைச் சட்டம் படி கல்வி என்பது 14 வரைவிலான குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை பாதுகாக்க வேண்டியதும் கட்டாய இலவச கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கு அளிக்க வேண்டியதும் பள்ளிகளின் கடமை மட்டுமல்ல ஊராட்சி அமைப்புகளின் கடமையும் கூட. எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்வதை தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும் தொடக்க கல்வியை முடிப்பதில் உறுதிப்படுத்தும், ஊராட்சி அமைப்புகளின் கடமை என்ன அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்," உள்ளாட்சித் துறையின் அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் பள்ளி மேலாண்மை குழுவை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலம், ஊராட்சி மன்ற அது பிரதிநிதிகள் தமிழக அரசோ அல்லது மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

அதன் மூலம் மாணவர்கள் நேரடியாக பயன் அடைகிறார்கள் என்பது குறித்து ஆராய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று குறித்து இதுவரை, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை அவ்வாறு வந்தால் அதற்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என தெரிவித்தார்.

English summary
Minister anbil mahesh poyyamozhi explains about restrictions on school corona is on the rise As the Corona virus outbreak continues, there has been no announcement from the Chief Minister's Office about the restrictions on schools so far, School Education Minister anbil mahesh poyyamozhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X