பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையென்றால் ஜெ. பிரதமராக வேண்டும்- அமைச்சர் செந்தூர் பாண்டியன்

நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் மாநில மகளிரணி செயலாளர் சசிகலா புஷ்பா தலைமையில் தென்காசியில் நடநதது.
இதில் கலந்து கொண்ட தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசுகையில், காங்கிரசும், பாஜகவும் மாறி மாறி ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருந்தாலும் இந்தியாவுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக் குறியாக இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்பு அனைத்தும் சட்டமாக்கப்பட மத்தியில் பிரதமராக முதல்வர் ஜெயலலிதா வரவேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசு என்ற பெருமை கிடைக்கும் என்றார் அவர்.
கூட்டத்தில் வரும் பிப் 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு உதவிகள் வழங்குதல், சிறப்பு பூஜைகள், பிரார்ததனைகள், தொழுகைகள் செய்திடவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்கிட பாடுபடுவது எனவும் முக்கிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர்கள் அக்பர்ஷா, ஷமீம் இப்ராகிம், எப்சி கார்த்திகேயன், விநாயக மூர்த்தி, ஓன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்வராஜ், நகர செயலாளர்கள் தென்காசி முத்துகுமார், அம்பை அறிவழகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவம்.. டிரோன் உதவியுடன் சிறார்கள் உள்பட 8 பேர் கைது! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications