இனிமேல் மின்கட்டணத்தையும் ஸ்வைப்பிங் கார்டில் செலுத்தலாம் - வந்தாச்சு புதிய வசதி
கார்டு மெஷின் மூலம் இனிமேல் மின்கட்டணங்கள் கட்டலாம். அலுவலகங்களில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : மின்கட்டணங்களை ஸ்வைப்பிங் கார்டுகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்தினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று மின்கட்டணங்களை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஸ்வைப்பிங் கருவி மூலம் கட்டுவதற்கான திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ' இப்போது எல்லா இடங்களிலும் கார்டு மெஷின் வந்துவிட்டது. மக்கள் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். மக்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாக மின்வாரிய இணையதளத்திலேயே கட்டணம் செலுத்தும் வசதி முன்பே வந்துவிட்டது.
அதுபோல தற்போது மின்சார அலுவலகங்களிலும் கார்டு மெஷின்களைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அலுவலகங்களுக்கும் கருவிகள் வழங்கப்பட்டு அதைப்பயன்படுத்தும் முறையும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் தற்போது எங்கும் மின் தடை இல்லை. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் பேசி பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதுபோல மின் உற்பத்தியும் தேவையான அளவு இருக்கிறது.
கனமழை பெய்யும் நேரங்களில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நிலைமை சீரானதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும். இதை பொதுமக்கள் சிரமமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல, மழையை சமாளிக்க மின்சாரத்துறை போதுமான ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது' என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications