திவாகரன் பிரித்தாளுகிறார்... தினகரன் சிரிப்பு காட்டுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
பொதுக்குழுவுக்கு எதிராக கருத்து கூற டிடிவி தினகரனுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: கட்சியை கைப்பற்றலாம் என நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்றும் பொதுக்குழுவுக்கு எதிரான தினகரன் கருத்து நகைப்புக்குரியது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
செப்டம்பர் 12ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்த அறிவிப்பும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியானது. இந்த கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனை நீக்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

தினகரன் அறிக்கை
இதனிடையே இன்று டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூட உள்ள கூட்டம் சட்ட விரோதமானது என்று கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு முரனானது என்று கூறியுள்ள தினகரன் நிர்வாகிகள் யாரும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நடவடிக்கை பாயும்
விதிகளை மீறி பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும், பொதுக்குழு கூட்ட அறிவிப்பை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார் கண்டனம்
தினகரன் அறிக்கை பற்றி கருத்து கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழு கூட்டம் பற்றி கருத்து கூற தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கட்சியை கைப்பற்றலாம் என்று நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

பிரித்தாளும் சூழ்ச்சி
திவாகரன் பேட்டிகள் பிரித்தாளும் சூழ்ச்சிதான். வெள்ளைக்காரர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள்.
அதிமுகவில் ஜாதி, மத பிரிவு கிடையாது. ஜாதி துவேஷத்தை திவாகரன் கையில் எடுக்கிறார் என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications