முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளார்கள்: திமுகவினரை சரமாரியாக கிண்டலடித்த அமைச்சர்!
திமுக உறுப்பினர்கள் இன்று மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளதை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக உறுப்பினர்கள் இன்று மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளதை, முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக கிண்டலடித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அவையை புறக்கணித்த திமுக எம்எல்ஏ.,க்கள் இன்று சட்டசபைக்கு வந்துள்ளனர். தோழமை கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு வந்துள்ளனர்.

ஜெயக்குமார் கிண்டல்
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முறுக்கிவிட்டுப் போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர் என கூறி கிண்டலடித்தார்.

வீணடித்துவிட்டனர்
அவர் பேசியதாவது, 4 நாட்கள் சட்டசபையில் கலந்துகொள்ளாமல் திமுகவினர் வீணடித்துவிட்டார்கள். எவ்வளவோ பிரச்சனைகளை விவாதித்திருக்கலாம்.

முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளை
முறுக்கிவிட்டுப் போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர். தற்போது ஜனநாயக கடமையாற்ற வரும் திமுகவை வரவேற்கிறோம். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஆயிரத்தில் ஒருவனா?
கமல் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா ? ஆயிரத்தில் ஒருவனா ? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

ஆள் இல்லாத கடையில்
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்ற டிடிவி தினகரனின் கருத்து "ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல் உள்ளது". இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications