நமது எம்ஜிஆர் கருத்துக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை... ஜெயக்குமார் அடேங்கப்பா விளக்கம்!
மோடி அரசை விமர்சித்து நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் வெளியான கருத்து அதிமுகவின் கருத்து இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி அரசை விமர்சித்து நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியான செய்திக்கும் அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடன, அதிமுக அம்மா அணியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நமது எம்ஜிஆர் நாளேட்டில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் 3 ஆண்டு கால ஆட்சியை விமர்சித்து கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
பாஜகவை கடுமையாக விமர்சித்ததோடு, தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு நயவஞ்சக அரசு என்ற மேற்கோளுடன் சித்ரகுப்தன் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

இணக்கம் இல்லையா
அதிமுக அம்மா அணியினர் மத்திய அரசுடன் அண்மைக் காலமாக இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நமது எம்ஜிஆர் நாளேட்டில் வெளியான சித்ரகுப்தன் கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக கருத்தே கிடையாது
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், நமது எம்ஜிஆர் நாளேட்டில் வந்த கருத்து அதிமுகவின் கருத்து இல்லை என்றார்.

அரைத்த மாவையே
பிறகு அப்படியே திசை திரும்பி, அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியே தடையாக இருப்பதாக அறைத்த மாவையே அறைத்தார்.

நாங்க ரெடிதான்
ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் பலர் எங்கள் அணியில் இணையத் தயாராக இருக்கிறார்கள். அதிமுக அரசு கலைய வேண்டுமென ஓ.பி.எஸ். அணியினர் விரும்புகின்றனர். இது ஒரு போதும் நடக்காது.

ஆன்மா மன்னிக்காது
நிச்சயம் அடுத்த 2 மாதத்தில் தேர்தல் வராது. அடுத்த சட்டசபைத் தேர்தல் 2021ல் தான் நிச்சயம் நடக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications