விரக்தியில் பேசுறாரு.. பொன் ராதாகிருஷ்ணன் பேச்சை பெருசா எடுத்துக்காதீங்க.. ஜெயக்குமார் சுளீர் பதிலடி
சென்னை: தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருவதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில் அதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அரியலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவருகிறது என்றும் இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகள் விவகாரம் தொடர்பான தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே தான் கூறி வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

பொன்.ராதா கேள்வி
தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்படுவது, இதை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் பொன்.ராதா கேள்வி எழுப்பினார்

திமுக விளக்கம் தரணும்
சிறுபான்மையினர் வாக்குக்காக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான வேலையைச் செய்யத் தொடங்கியிருப்பதாகவும், தி.மு.க கூட்டணிக் கட்சிகளோடு இஸ்லாமியத் தீவிரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார்.

பெருசா எடுத்துக்காதீங்க
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறிகையில் "பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியின் உச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அவரது கருத்தை பெரிதாக எடுத்துக்!கொள்ள தேவையில்லை" என்றார்.

மத்திய அரசு பாராட்டு
நல்லாட்சி நடப்பதாக தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா? மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

விரக்தியில் பேசுகிறார்
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைவர் பதவி கிடைக்குமா கிடைக்காதா என்று தான் ஜோசியம் சொல்ல முடியாது என்று கூறிய ஜெயக்குமார் இங்கிருந்து ஒருவர் ஆளுநராக சென்ற விரக்தியில் இப்படி பேசுகிறார் என்றார்,
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications