கமல் ஹாஸன் ட்வீட்டை பாட்டுப்பாடி கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!
கமல் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அரசு இல்லை! - அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை: கமல் ஹாஸன் சொல்லி எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலையில் இந்த அரசு இல்லை. அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து வருகிறது, என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வட சென்னையில் எண்ணூர் கழிமுகத்தில் நில ஆக்கிரமிப்பு, கொசஸ்தலை ஆற்றில் கழிவைக் கொட்டுதல், நட்டாற்றில் எண்ணெய் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றைச் சுட்டிக் காட்டியுள்ள கமல் ஹாஸன், வரும் நாட்களில் கன மழை பெய்தால் வடசென்னை கடுமையாக பாதிக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். போதிய எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே தொடங்கவும் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார் தன் ட்விட்டர் பக்கத்தை.

கிண்டல்
நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று தனது பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, கமலின் இந்த ட்விட்டை பாட்டுப் பாடி கிண்டலடித்தார்.
|
தேவையில்லை
அவர் கூறுகையில், "கமல் ஹாஸன் சொல்லி தான் செய்வது என்பது இல்லை. அம்மாவின் அரசில் எல்லா முன் எச்சரிக்கை நடவடிகைகளை நாங்களே எடுப்போம். அவர் அறிவுரை தேவையில்லை.

தேர்தல் பயம்
கமல் ஒரு படத்தில் பயம் பயம் என்று சொல்வது போல ஸ்டாலின்தான் தேர்தலை கண்டு பயப்படுகிறார். தேர்தலைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை. தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நில அபகரிப்பு
நில அபகரிப்புக்கு தந்தை என்றாலே திமுக மட்டும் தான். இப்போது சுதந்திரமாக அனைவரும் நிலம் வாங்கலாம். ஆனால் அன்றைய திமுக ஆட்சியில் அவர்கள் துணை இருந்தால் மட்டுமே நிலம் வாங்க முடியும். ஆனால் எங்கள் ஆட்சியில் இந்த நிலை மாறி அனைவரும் சுதந்திரமாக நிலம் வங்குகிறாராகள்.

தினகரனும் ஸ்டாலினும்
தலை எப்படி இருக்கிறாரோ அப்படி தான் வால் ஆடும். தினகரன் எப்படி அம்மாவின் ஆட்சியை கலைக்க வேண்டுமென நினைக்கிறார். அதை நாஞ்சில் சம்பத் வெளியிடுகிறார். ஸ்டாலினும், தினகரனும் ஒரே படகில் சவாரி செய்பவர்கள்," என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications