Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்காது.. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தூத்துக்குடி போராட்டம் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி-வீடியோ

    சென்னை: மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கல்வீச்சு தவறு

    கல்வீச்சு தவறு

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது, ஜனநாயக அமைப்பில் வன்முறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தியது தவறு.

    முழுமையான தகவல்

    முழுமையான தகவல்

    தூத்துக்குடி போராட்ட சம்பவத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பது பற்றி அரசு முடிவு எடுக்கும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

    அரசின் நிலைப்பாடு

    அரசின் நிலைப்பாடு

    போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடு.

    அரசு மதிப்பளிக்கும்

    அரசு மதிப்பளிக்கும்

    மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்காது.
    தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும்.

    அரசுக்கு ஒப்புதல் இல்லை

    அரசுக்கு ஒப்புதல் இல்லை

    வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தில் தமிழக அரசுக்கு ஒப்புதல் இல்லை. பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    இருட்டடிப்பு செய்யவில்லை

    இருட்டடிப்பு செய்யவில்லை

    துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை சேகரித்து வருகிறேன். தூத்துக்குடியில் கலவர செய்திகளை ஒளிபரப்பும் சேனல்கள் அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+