காவிரி: குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்
காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
கொடைக்கானல்: காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

அழுது புலம்பினாலும்
இந்நிலையில் கொடைக்கானலில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது.

உரிய இழப்பீடு
சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு 8 வழி சாலை அமைக்கப்படும்.

தவறில்லை
தூய்மை பணி குறித்து மட்டுமே ஆளுநர் ஆய்வு செய்துள்ளார். அவர் ஆய்வு செய்ததில் தவறில்லை.

நீதிமன்றம்
ராகுல், குமாரசாமியை கமல் சந்தித்தது கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போல் தெரிகிறது. தகுதி நீக்க எம்எல்ஏக்கள் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications