கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை.. விளாசிய ஜெயக்குமார்
காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் போலியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மத்திய அரசின் எடுபிடிகளை போல தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் கூறி கமல் கடுமையாக சாடினார். இந்நிலையில் கமலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியல்வாதியாக ஏற்க முடியாது
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமலை நடிகராக ஏற்கலாம் அரசியல்வாதியாக ஏற்க முடியாது என்றார். கமலிடம் நடிகருக்கான பண்பு மட்டுமே உள்ளது என்றும் அரசியல்வாதிக்கான பண்பில்லை என்றும் ஜெயக்குமார் சாடினார்.

போராட்டம் நடத்த துப்பில்லை
காவிரி பிரச்சனை பற்றி கமலுக்கு என்ன தெரியும் ? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் விளாசினார்.

ரயிலில் சென்றது சாதனையா?
சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றது சாதனையா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். கமலுக்கு பதில் சொல்ல தனக்கு நேரம் இல்லை என்றும் காவிரியில் நமது உரிமையை பெறுவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

பக்குவம் கிடையாது
டிவிட்டரில் அரசியல் செய்து, எழுதி வைத்து படிக்கும் சிறந்த நடிகர் கமல் என்றும் அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு பக்குவம் கிடையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துரோகம் செய்த திமுக
ஸ்டாலினும், கமலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளாசினார். காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்தது திமுக தான் என்றும அவர் சாடினார்.

குடும்ப சொத்து
ஸ்டாலின் நடத்தும் கபட நாடகம் மக்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான ஏராளமான டிவி சேனல்கள், எப்எம்கள், மற்றும் வணிக மால்களை காவிரிக்காக மூட வேண்டியது தானே என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications