ஓ.பிஎஸ் அணியை வாங்க பேசலாம்னு கூப்பிடுறோம் ஆனா வரமாட்றாங்களே! - ஜெயகுமார் சாடல்
ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே ஒற்றுமை இல்லை என்று நிதியமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தை தெரிவித்து வருவதாக அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ள்ளார்.
அதிமுகவின் இபிஎஸ் அணி மற்றும் ஓ.பிஎஸ் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு நல்ல சூழல் உருவாகி வருவதாக இரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலை தொண்டர்களிடம் கருத்து கேட்டதின் அடிப்படையில் இபிஎஸ் அணியுடன் இணைய வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் ஜெயகுமார், செம்மலை கருத்து குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன், இது வரை கட்சியை ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும் விரைவில் சுமூக பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் கூறினார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் முரண்பாடான கருத்தகளை தெரிவித்து வருவதாக கூறினார். ஓ.பிஎஸ் அணியை நாங்கள் பேச்சுவார்த்தை வாங்க பேசலாம் என்று அழைப்பு விடுத்துவிட்டோம், ஆனால் அவர்கள் தரப்பில் செம்மலை, பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக ஜெயகுமார் கூறினார்.
நிபந்தனைகள் பற்றி பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறியிருந்தாலும் பேச்சவார்த்தையை இழுப்பதோடு, ஓ.பிஎஸ் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications