For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் சேதமடைந்த பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!

சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது நடைபெற்ற போராட்டத்தையடுத்து, அங்கு ஒருவாரமாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து, இன்று அந்த உத்தரவு திரும்ப பெறுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்

Minister Kadambur Raju examined in Thoothukudi

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வருகை தந்தார். அப்போது போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகள், மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் அதுகுறித்த பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். முழு அமைதியை நிலைநாட்டுவது குறித்தும், ஒருவார காலம் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் ஆலோசனையில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

English summary
Minister Kadambur Raju visited Thoothukudi District Collectorate. The Minister visited the damaged areas during the strike and damaged vehicles in the riot. Later he heard about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X