ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி.. திமுகவுக்கு அமைச்சர் வரவேற்பு!
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு திமுக ரூ.1 கோடி நிதி தருவதை வரவேற்கிறோம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு திமுக ரூ.1 கோடி நிதி தருவதை வரவேற்கிறோம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தவேண்டிய மொத்த ஆதார நிதியாக ரூ.40 கோடி தேவைப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழ் அமைப்புகள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

எட்டிவிடும் தூரத்தில்
இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கை கனவு எட்டிவிடும் தூரத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இன்னும் 2 வாரங்களில்
தமிழ் இருக்கைக்கு தேவையான எஞ்சிய ரூ.1 கோடி இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்கான வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

புதிய தமிழ்சொற்கள்
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு திமுக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். மேலும் புதிதாக 2500 தமிழ்ச்சொற்களை உருவாக்கும் பணி நடைபெறுகிறது என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

வழக்காடு மொழி
விரைவில் முதல்வர் இதற்கான அரசாணையை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications