சுட்டெரித்த கோடை வெயில்! சாலையோரம் நுங்கு சாப்பிட்டு இளைப்பாறிய அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்!
திருப்பூர்: சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக சாலையோரக் கடையில் நுங்கு சாப்பிட்டு Chill செய்திருக்கிறார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலுக்கு மத்தியில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குவதில் நுங்கு முதன்மை இடத்தில் உள்ளது.

வைட்டமின் பி, சி, மற்றும் கால்சியம், சோடியம், உள்ளிட்ட சத்துக்களும் நுங்கில் அதிகளவு உள்ளன. இதனால் தான் நுங்குக்கு எப்போதுமே கிராக்கி இருந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்துகொண்ட செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சாலையோரம் நுங்கு விற்கப்படுவதை பார்த்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி இறங்கியிருக்கிறார்.
அடிக்கிற வெயிலுக்கு இளைப்பாறும் விதமாக நுங்கு சாப்பிட்ட அமைச்சர் சாமிநாதன், தன்னுடன் சென்ற கட்சிக்காரர்களையும் நுங்கு சாப்பிட வைத்தார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், நுங்கை தனியாக சீவி எடுக்கமல் நுங்கிற்குள் உள்ள தண்ணீரை மட்டும் அமைச்சர் சாமிநாதன் அருந்தியது தான். அதில் தான் உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது.

தற்போது நுங்கு சீசன் என்பதால் எங்கு பார்த்தாலும் குறிப்பாக நெடுஞ்சாலைப் பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு மாதம் போனால், சீசன் முடிந்து நுங்கை பார்ப்பதே அபூர்வமாகிவிடும் என்பதால் சீசன் முடியும் முன்பே அதனை அதிகளவில் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications