ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த முதலாவது அமைச்சர்.. மாஃபா பாண்டியராஜன்!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிபடுத்தியுள்ளார்.
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிபடுத்தியுள்ளார். முதன்முறையாக அமைச்சரே நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் சசிகலா பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அம்மாவின் ஆன்மா எம்எல்ஏக்களின் மனச்சாட்சியை உசுப்பும் என்று கூறி நம்பிக்கையுடன் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

இளைஞர்கள், அதிமுக தொண்டர்கள், மாணவர்கள் என பெரும்பாலோனோர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், முதல்வர் ஓபிஎஸ் எடுத்துள்ள சந்தர்ப்பவாதம் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இன்று தனது டுவிட்டர் பதிவில் வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கும் முக்கியத்துவம் தருவேன் என்றும் ஜெயலலிதா வலியுறுத்திய ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார். மக்கள், தொண்டர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பேன் என்றும் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.
இதற்கு அவரை பின்பற்றுபவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் நல்ல முடிவாக எடுங்கள் என்று பதில் பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில் விரைவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை மாஃபா பாண்டியராஜன் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படையாக உறுதிபடுத்தியுள்ளார். முதன்முறையாக அமைச்சர் ஒருவரே நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இன்னும் சில அமைச்சர்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் ஓபிஎஸ்ஐ ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தனது தொகுதி வாக்காளர்களின் கோரிக்கையை ஏற்று வந்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்.
முன்னதாக வாக்காளர்களின் எண்ணங்களை கேட்டு, அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என டுவிட்டரில் கூறியிருந்ததோடு தற்போது முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications