For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமல் ஒரு செல்லாக்காசு... ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்!

கமல்ஹாசன் ஒரு செல்லாக்காசு, அவர் பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

விருதுநகர்: காவிரி பிரச்சினை பற்றி கமல்ஹாசன் 65 வயதில் பேசுகிறார். அவர் ஒரு செல்லாக்காசு என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

ஒத்தக்கடையில் கட்சி ஆரம்பித்த கமல் அரசியலில் ஒத்தையில் நிற்கிறார் என்றும் ராஜேந்திரபாலாஜி கிண்டலடித்துள்ளார்.

காவிரி பிரச்சினை தீர ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்தவர் என்றும், நேற்று கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சகுனம் சரியில்லை

சகுனம் சரியில்லை

நடிகர் கமலுக்கு, தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை. அவர் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார். கமலின் அரசியல் கட்சி தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை. கமல் கட்சி தொடங்கும் நேரமே சரியில்லை. அவருக்கு சகுனம் சரியில்லை.

கமல் ஒற்றை ஆள்

கமல் ஒற்றை ஆள்

கமலுக்கு கட்டிப்புடி வைத்தியம் தெரியும். மக்களை கட்டி காக்க தெரியாது. கட்சி ஆரம்பிக்க ராமேஸ்வரம் சென்றார். ராமேஸ்வரம் கர்மம் கழிக்கும் இடம். முதல் பொதுக்கூட்டம் நடத்திய இடமோ ஒத்தக்கடை. அவர் ஒத்தை ஆளாகத்தான் இருக்க போகிறார்.

கமல் செல்லாக்காசு

கமல் செல்லாக்காசு

65 வயசுக்கு மேல காவிரி பிரச்சினையை பேசுகிறார் கமல். கமல்ஹாசன் ஒரு செல்லாக்காசு, அவர்
பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம், அரசியலில் கமல் ஒத்தையில் நிற்கிறார் என்றும் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

ராஜேந்திரபாலாஜி பதிலடி

ராஜேந்திரபாலாஜி பதிலடி

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடும் போதே பல கருத்துக்களை தெரிவிப்பார் அமைச்சர் ராஜேந்தர் பாலாஜி. இப்போது கமல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தினசரியும் கமலுக்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

English summary
Kamal Hassan speaks about the Cauvery issue at the age of 65. Minister Rajendra Palaji said that he is single in Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X