தந்தையை இழந்த எச் ராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து-அமைச்சர் உதயகுமார் உளறலால் சர்ச்சை
தந்தையை இழந்த எச் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தந்தையை இழந்த பாஜக தேசிய செயலர் எச் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் எஸ்.ஹரிஹரன். சென்னையில் வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு ஆறுதல் சொல்ல அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தந்தையை இழந்து வாடும் எச் ராஜாவின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். இரங்கல் என கூறுவதற்கு பதில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வாழ்த்து என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டிய கலைஞர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். இதேபோல் சுஹாசினி மணிரத்னத்தை சுஹாசினி மணிவாசகம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்பது கூட தெரியாமல் அமைச்சர்கள் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications