சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. ஓடி வந்து சிகிச்சை அளித்த அமைச்சர் சரோஜா!
விபத்தில் சிக்கிய தம்பதிக்கு அமைச்சர் சரோஜா சிகிச்சை அளித்தார்.
ராசிபுரம்: சாலை விபத்தில் சிக்கிய தம்பதிக்கு அமைச்சர் சரோஜா சிகிச்சையளித்துள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஒரு டாக்டர். எம்.டி., டி.ஜி.ஓ. படித்தவர். மகப்பேறு மருத்துவராக அரசு மருத்துவமனை முதல் சவுதி அரேபியா வரை சென்று பணியாற்றியவர்.

ராசிபுரத்தை அடுத்து கூனவேலம்பட்டிபுதூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் பழனிவேல் என்பவர் மனைவி கமலத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பைக்கில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலும் கமலமும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியாம் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதித்தார்.
இந்த தகவல் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு தெரிந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் சரோஜா. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பழனிவேலுக்கும் கமலத்துக்கும் சரோஜாவே ஆறுதல் கூறி சிகிச்சையும் அளித்தார்.












Click it and Unblock the Notifications