இளங்கோவன் பேச்சுக்கு பதில் கொடுத்தால் கல்வித்துறை மங்கிவிடுமே.. செங்கோட்டையன்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்று செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஈரோடு : கோபியில் நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த வாரம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசும்போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்து பேசினார்.

அவர் பேசும்போது, 'இப்பகுதியில் இருந்து தான் ஒருவர் கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். அவரிடம் எதாவது கேள்வி கேட்டால் தான் அரசியல் பேசமாட்டேன் என்பார். அதற்குக் காரணம் அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது' என்று காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில் நேற்று கோபியில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் இளங்கோவனின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், அவர் பேசிய பேச்சுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. அப்படி அவரது பேச்சுக்கு நான் கருத்து கூறிக்கொண்டு இருந்தால் நான் வகிக்கும் கல்வித்துறையே மங்கி போய் விடும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில் , தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் எங்கெல்லாம் காலி பணியிடங்கள் உள்ளதோ அங்கு எல்லாம் காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று குறிப்பிட்டார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications