நாங்கள் அடிமைதான்.. சட்டசபையில் ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கொடுத்த பதில பாருங்க!
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினரை அடிமைகள் என கூறியதற்கு பதிலடியாக, ஆம், நாங்கள் அடிமைகள்தான் என்று தெரிவித்துள்ளார் மின்துறை அமைச்சர் தங்கமணி.
சட்டசபையில் நேற்று முன்தினம், அதிமுக எம்எல்ஏ முத்தையா, திமுக எம்எல்ஏக்களை பார்த்து மறைமுகமாக 89 வயக்காட்டு பொம்மைகள் என்று கூறியுள்ளார்.
இதை கண்டித்து ஸ்டாலின் பதிலுக்கு அதிமுகவினரை பார்த்து ஒரு வார்த்தையை சொல்ல, அதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுகவினரின் பெயரை குறிப்பிடாமல், 131 கொத்தடிமைகள், சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று தான், கூறியதாகவும், அதை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

தரம் தாழ்ந்த விமர்சனம்
இப்படி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும், ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுமக்கள் மத்தியிலும், இந்த தகராறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடிமைகள்தான்
இந்நிலையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேற்று சட்டசபையில், பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எங்களை அடிமைகள் என்றார். ஏற்றுக் கொள்கிறோம்.

அன்புக்கு அடிமை
முதல்வர் ஜெயலலிதா ஒரு தெய்வம், அந்த தெய்வத்திற்கு அடிமையாக இருக்கிறோம். அவரது அன்பிற்கு அடிமை, அவரது பாசத்திற்கு அடிமை, 'அம்மா' என்ற சொல்லுக்கு அடிமை. அவரது ஆணையை ஏற்று செய்து முடிக்க, ஒன்றரை கோடி தொண்டர்களும் தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இப்படி சொல்லலாம்
சரி.. அப்போ வயக்காட்டு பொம்மைகள் வார்த்தைக்கு திமுக எந்த மாதிரி விளக்கம் கொடுக்கும். ஒருவேளை, வயலுக்கு சேதம் விளைவிக்கும் பறவைகளை விரட்டி, அரிய சேவை செய்வது வயக்காட்டு பொம்மைதான் என்று விளக்கம் தருவார்களோ?

களைகட்டுகிறது
கடந்த அதிமுக ஆட்சியின்போது, திமுக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. அப்போது திமுக உறுப்பினர்களுக்கு அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது வாய்ப்பு அதிகம் கிடைத்துவரும் நிலையில், அவை நடவடிக்கைகள் களை கட்டியுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications