அம்மா முன் செருப்பு போடாத அமைச்சர் உதயகுமாருக்கு கட்சியில் புதிய பதவி

Subscribe to Oneindia Tamil

Minister Udayakumar gets news post in ADMK
சென்னை: தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயகுமாருக்கு அதிமுகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர், மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து அன்பழகன் விடுவிக்கப்படுகின்றார். அதே போல, எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயகுமார் விடுவிக்கப்படுகின்றார். அதற்கு பதிலாக அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் அம்பத்துார் நகரச் செயலரும், சென்னை மாநகராட்சி 89வது வார்டு உறுப்பினருமான அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதயகுமார் தான் முதல்வர் அம்மா இருக்கும் இடம் கோவில் என்று கூறி சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வரும் போது கூட தனது காலில் செருப்பு அணியாமல் வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+