அதிமுக அரசின் ஆயுளை நிர்ணயிக்க மு.க.ஸ்டாலினால் முடியாது... அமைச்சர் காட்டம்
அதிமுக அரசின் ஆயுளை நிர்ணயிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் காட்டமாக தெரிவித்தார்.
Recommended Video

திருமங்கலம்: அதிமுக அரசுக்கு ஆயுள் அதிகம். அதை நிர்ணயிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மதுரை மாவட்டம் , திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுக்கிணங்க விடுமுறை நாள்களிலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பீதியடைய வேண்டாம்
மேலும் மருந்து, மாத்திரைகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே டெங்கு குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் பணம் கேட்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஜெயலலிதாவின் ஆசி உள்ள அதிமுக அரசுக்கு ஆயுள் அதிகம். இன்னும் ஓரிரு நாள்களில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது நடக்காது.

ஸ்டாலினால் நிர்ணயிக்க முடியாது
அதிமுக அரசின் ஆயுளை நிர்ணயிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. அவரால் முடியவும் முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது. 7 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே கருத்து சொல்லும் அனைவருக்கும் (தினகரன்) பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பத்திரமாக வைத்துள்ளோம்
சிவாஜி சிலை கருணாநிதி நடுத்தெருவில் திறந்து வைத்தார். அதை அழகான மணி மண்டபம் அமைத்து அதனுள்ளே வைத்துள்ளோம். காகங்களின் எச்சத்தில் இருந்த சிலை தற்போது உள்ளே பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

மணி மண்டபத்துக்குள் உள்ளது
சிவாஜி மணி மண்டபத் திறப்பு விழாவில் பேசிய பிரபு, ராம்குமார் ஆகியோர் தங்களது தந்தை தெய்வம் என்றும் மணி மண்டபம் கோயில் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே தெருவில் இருந்த தெய்வத்தை கோயிலுக்கு கொண்டு சென்று வைத்துள்ளோம் என்றார் அவர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications