வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் வளர்மதி தகவல்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் சுரங்கப்பாதைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, வேலுமணி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் வளர்மதி கூறுகையில், பெரும்பாலான இடங்களில் முழுமையாக வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 41 முகம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகள், சுரங்கபாதைகள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கூடுதலாக வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2,500 ஒப்பந்த பணியாளர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி பகுதியில் படகில் சென்று மருத்துவ உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, சென்னையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்த 14 பேரில் 11 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 225 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் வேலுமணி கூறுகையில், கடந்த 1918 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. தற்போது பெய்த கனமழையால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் ஏதும் சேதமடையவில்லை என வேலுமணி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications