அமைச்சர்கள் காலையில் நல்ல வாயில் பேசுறாங்க...இரவில் நாற வாயில் பேசுறாங்க- ஓபிஎஸ் நக்கல்: வீடியோ
விழுப்புரம்: அமைச்சர்கள் காலையில் நல்ல வாயில் பேசுகிறார்கள். இரவில் நாற வாயில் பேசுகிறார்கள் என முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.
மாவட்டம்தோறும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று விழுப்புரத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒ.பன்னீர்செல்வம்,'' ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஒரு விசாரணை கமிஷன் அமைத்து, உண்மையை பொதுமக்களுக்கு சொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கையை விடுத்து 100 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு போல எடப்பாடி அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அடுத்து, அமைச்சர்கள் காலையில் ஒரு செய்தியை சொல்கிறார்கள். இரவில் அதையே வேறு மாதிரி சொல்கிறார்கள். கேட்டால் அது நல்ல வாய்... இது நாற வாய் என்கிறார்கள்'' என கூறினார்.
ஒபிஎஸ் குறிப்பிட்ட ஒரு அமைச்சரைக் குறித்துத்தான் இவ்வாறு கூறினார். ஓபிஎஸ்ஸுக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கிறேன் என அந்த அமைச்சர் கூறியதிலிருந்து வறுபட்டு வருகிறார். காரணம் நல்ல வாய் கருத்தை முன்பு மூத்த தலைவர் மதுசூதனனும் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications