தினகரனுக்காக அமைச்சர்கள் திண்ணையில் அமர்ந்து பிரச்சாரம்... ரெஸ்பான்ஸ் செய்வது மூதாட்டிகள் மட்டுமே!
சென்னை: அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்காக பெரும்பான்மையான அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள் மக்களுடன் திண்ணையில் அல்லது வாசலில் அமர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அவர்களைச் சுற்றி வயதான மூதாட்டிகள் மட்டுமே அமர்ந்துள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில், இடைதேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்காக பெரும்பான்மையான அமைச்சர்கள் ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் மக்களிடம் நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம் செய்கின்றனர். அப்போது மக்கள் வேண்டா வெறுப்பாக புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுக்கின்றனர்.

இதில் பெரும்பான்மையான மக்களுக்கு 'இவர், இந்த துறைக்கான அமைச்சர்' என்பது தெரியாத காரணத்தால் பிரச்சாரத்துக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு சிறப்பு மரியாதையோ, வரவேற்போ கிடைப்பதில்லை.
இந்நிலையில், புதுயுக்தியாக வீட்டுத் திண்ணைகளிலும் வாசலிலும் அமர்ந்து அமைச்சர் உதயகுமார், செந்தில்நாதன் எம்.பி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அவர்களைச் சுற்றி இளைஞர்களோ பெண்களோ அமர்ந்திருக்கவில்லை. வயதான மூதாட்டிகல் மட்டுமே கதை கேட்பது போல் அமர்ந்துள்ளனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது என அங்குள்ள பொதுமக்கள் கமெண்ட் செய்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications