அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவைப் பார்ப்பதாக கூறுகிறார் சி.ஆர். சரஸ்வதி!
சென்னை: அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் தினமும் "அம்மா"வை பார்த்து ஆலோசனை நடத்துகின்றனர் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவிற்கு உடல் நலம் சரியாகிவிட்டதாகவும் வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. ஆனாலும் அவரை இதுவரை யாரும் சென்று பார்த்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா உடல் நிலை குறித்து தலைமை செயலாளர் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, இன்று செய்தியாளர்களிடம் சி.ஆர். சரஸ்வதி, அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஜெயலலிதாவை சந்தித்து தினமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட சொன்னது பற்றிய கேள்விக்கு, "போட்டோவை வெளியிட்டாலும் அதற்கும் கருணாநிதி ஏதாவது சொல்வார். அது போட்டோ ஷாப்பில் உருவாக்கப்பட்டது என்பார். முதல்வர் பேசி ஆடியோவை வெளியிட்டாலும் அதற்கும் ஏதாவது கருணாநிதி சொல்வார்" என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications