தீச்சட்டி ஏந்திய கைகளில் இரட்டை இலை... சட்டென்று மாறிய "சீன்"கள்... கலக்கும் அமைச்சர்கள்!
சென்னை: சீன் போடுவதில் நமது அதிமுக அமைச்சர்களுக்கு ஈடு இணையே கிடையாதுபா.... கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தீச்சட்டி ஏந்தியும், தீ மிதித்தும், கோவில்களில் படுத்து உருண்டும் (அங்கப்பிரதட்சனம்), பால் காவடி எடுத்தும் அசத்தி வந்த அமைச்சர்களுக்கு இப்போது புதிய அசைன்மென்ட்டை மேலிடம் கொடுத்துள்ளது.
அந்த அசைன்மென்ட்டோடு அத்தனை பேரும் அலேக்காக ஓடி வந்து விட்டனர் ஆர். கே. நகர் தொகுதிக்கு.
இது நாள் வரை தனித் தனியாக திறமை காட்டி வந்த அத்தனை அமைச்சர்களும் தாங்கள் இதுவரை காட்டி வந்த அத்தனை திறமைகளையும் மொத்தமாக இங்கு களம் இறக்கியுள்ளனர் - "அம்மா"வை வெற்றி பெற வைப்பதற்காக.

இந்தப் படை போதுமா
மொத்தம் 50 பேர் கொண்ட பிரசாரப் படையை ஆர்.கே.நகரில் களம் இறக்கியுள்ளார் ஜெயலலிதா. இந்தப் படைக்குத் தலைமை தாங்குபவர் ஜெயலலிதாவின் படைத் தளபதி ஓ.பன்னீர் செல்வம்.

அப்படியே ராஜ்கிரண் மாதிரியே கீறாருபா!
ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்க்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், அப்படியே ராஜ்கிரண் மாதிரியே கீதுபா இவரு முகம் என்று சிலாகிக்கின்றனர். காரணம், அடர்ந்து வளர்ந்துள்ள தாடியுடன் ராஜ்கிரண் சாயலில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

இது உனக்கு.. இது எனக்கு
பெண் அமைச்சர்கள் பா. வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் இரட்டை இலையை கையில் எடுத்துக் கொண்டு வாயெல்லாம் பல்லாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

நல்லா தூக்கிப் பிடிப்பா
ஐஸ்கிரீம் சாப்பிட பயன்படுத்துவோமே ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன்.. அதே போல அதை விட பெரிய சைஸில் ஆன தாங்கியுடன் கூடிய இரட்டை இலையை ஓ.பி.எஸ்ஸும் கையில் பிடித்துக் கொண்டு பிரசாரம் செய்தார். நன்றாக தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி அவர் வந்த காட்சி அமோகமாக இருந்தது!

கடைக்கார்.. கடைக்கார்.. ஓட்டு ப்ளீஸ் கடைக்கார்!
பொட்டிக் கடைகளையும் விடவில்லை ஓ.பி.எஸ். கும்பிட்டு வணக்கம் போட்டபடி ஓட்டுக் கேட்டதால் கடைக்காரர்களே கூட அசந்து போனார்கள்.

சினுங்காம நடங்கப்பா
பிரசாரத்தில் கலந்து கொண்ட ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், பிரமுகர்களும் நடந்து சென்று ஓட்டுக் கேட்டது மக்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தேர்தல் முடிவதற்குள் இதுபோல இன்னும் இன்னும் நிறைய காட்சிகளைக் காணலாம் போல ஆர்.கே.நகரில்!












Click it and Unblock the Notifications