Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னைக் கேவலப்படுத்திய செல்லூர் ராஜு... ஓ.பி.எஸ்ஸின் குமுறல்

அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் எனது பதவியை அவமதிக்கும் வகையில் பேசினர் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தபோது, தான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன் என்பது குறித்து ஓரளவு புலம்பலாக தெரிவித்தார். அதில் சில அமைச்சர்கள் குறித்து அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

முதல்வர் அளித்த பேட்டியின்போது செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயக்குமார் ஆகிய இரு அமைச்சர்களின் செயல் குறித்து வேதனை தெரிவித்தார். இவர்கள் தன்னை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

Ministers Sellur Raju and RB Udayakumar insulted me, says OPS

முதல்வர் பேசுகையில், சசிகலா தான் முதல்வர் ஆக வேண்டும் என ஆர்.பி உதயகுமார் பேட்டி தந்தார். நான் இது குறித்து சசிகலா தரப்பிடம் கேட்டதற்கு, நாங்கள் அவரை கூப்பிட்டு திருத்துகிறோம் என்றார்கள். அப்போது என்னை வந்து சந்தித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அவர் என்னிடம், அண்ணே உதயகுமார் ஏன் இவ்வாறு பேட்டி தருகிறார். எங்களுக்கு எல்லாம் மன வருத்தமாக இருக்கிறது என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால் மதுரைக்குப் போன பின்னர் அதே செல்லூர் ராஜு, கழக பொதுச் செயலாளரே முதல்வராகவும் ஆக வேண்டும் என்று கூறி பேட்டி தந்து தன் பங்குக்கு என்னை அவமதித்தார்.

இவர்கள் மட்டுமல்ல கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கூட இதேபோலத்தான் பேசி என்னை அவமதித்தனர். எனது பதவியை அவமதித்தனர் என்றார் ஓ.பன்னீர் செல்வம். இதே மாதிரி செங்கோட்டையன் அண்ணன் உள்பட பலரும் பேசினார்கள்..

தன்னை அவமதித்தவர்களாக அவர் கூறியவர்களில் தம்பித்துரையையும் மறக்காமல் குறிப்பிட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

CM O Panneerselvam while talking to the media yesterday he said that, Ministers Sellur Raju and RB Udayakumar insulted him by asking Sasikala to take over the CM post.

60

முதல்வர் பதவியில் நான் இருந்தபோதே சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமாரும், செல்லூர் ராஜுவும் பேசியது என்னை வேதனைப்படுத்தியது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+