கோவில்பட்டியில் தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி
கோவில்பட்டி: வீட்டில் தனியாக இருந்த சிறுமியை குடிபோதையில் இருந்த தாயின் கள்ளக்காதலன் பலத்காரம் செய்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய். இவரது மகள் லட்சுமி (12) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிழைப்புக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தீக்குச்சி கம்பெனிக்கு இசக்கிதாய் வேலைக்கு சென்றார்.

அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிவகாசியை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவருடன் இசக்கிதாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கி தாய் தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் மீண்டும் கோவில்பட்டியில் உள்ள பாரதியார்நகருக்கு குடிபெயர்ந்தார்.
இசக்கிதாயின் மகள் லட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் கோவில்பட்டியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இசக்கிதாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். மாலை வழக்கம் போல மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த இசக்கிதாய் அவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
பள்ளி மாணவியான லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் போதை தலைக்கேறிய மணிகண்டன் தனது கள்ளக்காதலியின் மகள் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கோவில்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications