கரூர் அருகே 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர்: தீக்குளித்த சிறுமி
கரூர்: கரூர் அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகமலை அருகே உள்ளது காவக்காரன்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 14, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மல்லிகா கடந்த 28ம் தேதி தோகமலையில் நடைபெற்ற வார சந்தைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரங்கநாதன், பாலமுருகன், ராஜா ஆகியோர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் மல்லிகாவை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
மல்லிகா சத்தம் போட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிறுமி மல்லிகா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மல்லிகாவை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரங்கநாதன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜா என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications