நெல்லை அருகே மாணவன் கழுத்தறுத்து கொலை: நரபலியா? என சந்தேகம்
நெல்லை: நெல்லை அருகே மாணவன் ஒருவன் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள், மாணவனை கடத்தி நரபலி கொடுத்து கொலை செய்தார்களா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ளது முத்துவீரப்பபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சுடலை என்பவரின் மகன் இசக்கிதாஸ். அவன், அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
திருக்கார்த்திகை தினமான ஞாயிறன்று மாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். வெகு நேரம் ஆகியும், அவன் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த இசக்கிதாஸ் பெற்றோர், இரவு முழுவதும் அவனை தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு கிணற்றில் இசக்கிதாஸ் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளது. இதை பார்த்த அவனது பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுது அவனது உடலை தேடியுள்ளனர். அப்போது, இசக்கிதாஸ் உடல், அந்த கிணற்றில் இருந்து சற்று தூரத்தில் கிடந்துள்ளது.
இந்த தகவல் கிடைத்ததும் மூலக்கரைப்பட்டி போலீஸார் விரைந்து வந்து இசக்கிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவன் இசக்கிதாஸை, மர்ம நபர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என்று பெற்றோரும், ஊர் பொதுமக்களும் சந்தேகப்படுவதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றானர்.
இந்த சம்பவம், சுற்றுப்புற கிராம மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications