விஜய் பட ஸ்டைலில் கரூர் கோவிலில் மாணவியின் ஜடையை வெட்டிய மர்மநபர்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் தாந்தோணிமலை ஊரணி காளியம்மன் கோவிலில் கல்லூரி மாணவியின் ஜடையை மர்ம நபர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் தாந்தோணிமலை ஊரணி காளியம்மன் கோவிலுக்கு வரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் சேலை, துப்பட்டாவை வைத்து தலையை மூடியபடி வருகிறார்கள்.

Miscreant cuts college girl's hair in Karur temple

காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நடந்த சம்பவம் ஒன்று. கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவிகள் சிலர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கோவிலில் இருந்து கிளம்பும்போது பார்த்தால் மாணவி ஒருவரின் ஜடையை யாரோ நைசாக வெட்டியது தெரிய வந்தது. சக மாணவிகள் பார்த்து கூறிய பிறகு தான் அந்த மாணவிக்கே தனது முடியை யாரோ வெட்டியது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

முன்பும் கூட இதே கோவிலில் இப்படி பெண்களின் ஜடையை யாரோ கத்தரித்த சம்பவங்கள் நடந்துள்ளன. தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி கோவிலுக்கு அருகில் உள்ளது.

கல்லூரி மாணவிகள் அடிக்கடி கோவிலுக்கு வருவார்கள். அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் கோவிலில் மாணவிகள், பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பாச்சி படத்தில் விஜய் தனது தங்கைக்கு பிடிக்காத பெண்ணுக்கு நீளமாக முடி இருப்பதை பார்த்துவிட்டு இரவோடு இரவாக சென்று ஜடையை கத்தரித்துவிடுவார். அவர் இரவில் செய்த வேலையை கரூரில் யாரோ பட்டப்பகலிலேயே செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+