மே 8ல் கூத்தாண்டவர் கோயில் திருவிழா… மிஸ் கூவாகத்திற்கான ஏற்பாடுகள் படுஜோர்: வீடியோ
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் அடுத்த மாதம் 8ம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. அப்போது நடக்கும் மிஸ் கூவாகத்திற்கான ஏற்பாடுகளை திருநங்கைகள் படுஜோராக செய்து வருகின்றனர்.
விழுப்புரம்: இந்த ஆண்டிற்கான கூவாகம் திருவிழா வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளும் படுஜோராக நடைபெற்று வருகிறது. இதில், கலை நிகழ்ச்சிகள், தனித் திறமை வெளிப்படுத்துதல், மிஸ் கூவாகம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருணா செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த ஆண்டிற்கான மிஸ் கூவாகம் தேர்வு வரும் 8ம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மிஸ் கூவாகம் 2017 பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது என்றும், இதில் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் சுற்று போட்டி நடைபெறும் என்றும் கூறிய அருணா, இறுதிச் சுற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படும் என்றும் கூறினார்.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், நடிகர் ராகவா லாரன்ஸ், சிலம்பரசன் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிர, வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications