ஏ.என்.32 விமானத்தில் பயணித்த தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணன் உட்பட 29 பேரின் பெயர் பட்டியல் வெளியீடு
சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி சென்ற ஏ.என்-32 விமானத்தில் பயணித்த தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணன் உட்பட 29 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏ.என்.32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் அது சென்னைக்கு அருகே திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடந்த 5 நாட்களாக அந்த விமானத்தை தேடும்பணி நடந்து வருகிறது.

இதையடுத்து 29 பேர் பயணித்த அந்த விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள் 14 ஹெலிகாப்டர்கள், 9 போர் விமானங்கள் ஈடுபட்ட போதிலும் கடந்த 5 நாட்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த விமானப்படை அதிகாரிகாள், துணை விமானி, ராணுவ வீரர்கள் உள்பட 29 பேரின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
பட்சாரா (கேப்டன்), பி.கே.நந்தால் (துணை கேப்டன்), குணார் பார்பேட்டி, ரஞ்சன் (பொறியாளர்), ஜி.சவுத்ரி, கபில், தீபிகா, பி.சந்த், முத்துகிருஷ்ணன், முகேஷ் தாகூர், சி.எஸ்.யாதவ், ஏக்நாத் தாக், ஜின்சா ஷியாம், விமல், பிரசாத் பாபு, பூர்ண சந்திரா, சந்திரன் மகாராணா, சின்ன ராவ், சீனிவாச ராவ், அகிலேஷ், பிபின் குமார், எல்.கே. திரிபாதி, ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங், ரவிதேவ் சிங், சம்பவ் மூர்த்தி, பூபிந்தர் சிங், நாகேந்திர ராவ், சஜீவ் குமார் ஆகியோர் விமானத்தில் பயணம் செய்தனர். இதில் முத்துகிருஷ்ணன் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications