காரைக்காலில் 2 நிமிடத்தில் 5,000 அடி கீழே வந்த மாயமான டோர்னியர் விமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலோர காவல்படைக்கு சொந்தமான மாயமான டோர்னியர் விமானம் காரைக்கால் கடல் பகுதியில் 2 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் அடி கீழே இறங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் ஒன்று கடந்த 8ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து பாக் ஜலசந்திக்கு ரோந்து பணிக்கு கிளம்பியது. விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

Missing Dornier aircraft descended 5000 ft in 2 minutes

ரோந்து பணிக்கு சென்ற விமானம் அன்று இரவு சென்னைக்கு திரும்புகையில் திடீர் என் மாயமானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் 2 நீர் மூழ்கி கப்பல்கள் உள்பட 15 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை மாயமான விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் அளித்த தகவலை வைத்து அங்கு விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று விமானம் காரைக்கால் கடல் பகுதியில் பறக்கையில் வெறும் 2 நிமிடங்களில் 5 ஆயிரம் அடி கீழே இறங்கி வந்தது தெரிய வந்துள்ளது. விமானம் மாயமாகி இத்தனை நாட்களாகியும் தகவல் கிடைக்காததால் அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+