கன்னியாகுமரி அருகே பரபரப்பு.. காரில் வாலிபர்களுடன் வந்த இளம்பெண் திடீர் மாயம்?
கன்னியாகுமரி: கன்னியாகுமாரி, தென்தாமரைகுளம் அருகே சொகுசு காரில் வாலிபர்களுடன் வந்து இறங்கிய இளம் பெண் என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி சாலையில் நேற்று முன்தினம் இரவு கருப்பு நிற சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அகஸ்தீஸ்வரம் வழியாக வந்த அந்த கார் இரவு சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரில் இருந்து 3 வாலிபர்களும், 1 இளம் பெண்ணும் வேக வேகமாக இறங்கினர்.

காரின் கதவை கூட பூட்டாமல் அவர்கள் அவசரம் அவசரமாக பைக்குகளில் ஏறி அங்கிருந்து சென்றனர். அந்த வழியாக சென்ற சிலர் இதை கவனித்து தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது காரில் ஒரு துப்பட்டா மட்டும் கிடந்தது. இது தவிர ஒரு கத்தியும் இருந்ததாக கூறப்படுகிறது.
காரில் வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் இதுவரை திரும்பியும் வரவில்லை. இளம் பெண் என்ன ஆனார்? வாலிபர்கள் எங்கே சென்றார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது. அந்த கார் தமிழ்நாடு 55 பதிவெண் கொண்டது. எனவே வெளி மாவட்டத்தில் இருந்து இளம்பெண்ணை கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications