மதுரை.. அதிர அதிர அமர்க்களப்படுத்திய அழகிரி பிறந்தநாள்! சாரட் வண்டியில் ஊர்வலம்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி இன்று தமது 63வது பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடினார். சாரட் வண்டியில் அழகிரியை அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்து சென்று மதுரையை அதிர வைத்தனர்.

மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதி சாய் நகர் வீட்டில் மு.க. அழகிரி இன்று காலை 8.45 மணியளவில் பிறந்தநாள் கேக் வெட்டினார். அப்போது அவரது மனைவி, மகள், மகன், மருமகள் மற்றும் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

குடும்பத்தினருக்கு அழகிரி கேக் ஊட்டி மகிழ்ந்தார். அழகிரியின் பிறந்த நாள் விழாவில் கே.பி. ராமலிங்கம், நெப்போலியன், ரித்தீஷ் ஆகிய 3 திமுக எம்.பிக்களும் கலந்து கொண்டனர். பின்னர் தொண்டர்கள் புடை சூழ மதுரை ராஜா முத்தையா மன்றத்துக்கு அழகிரி அழைத்துச் செல்லப்பட்டார்.

அரை மணி நேரமானது..

அரை மணி நேரமானது..

அவர் செல்லும் வழி எங்கும் மேள தாளம், கரகாட்டம், சிலம்பாட்டம், செண்ட மேளம் முழங்க பட்டாசுகள் வெடிக்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் ஒவ்வொரு பகுதியையும் கடந்து செல்ல அரை மணி நேரம் ஆனது.

நூற்றுக்கணக்கான வாகனங்கள்..

நூற்றுக்கணக்கான வாகனங்கள்..

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டது. மு.க. அழகிரிக்கு முன்பாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அண்ணா சிலை..

அண்ணா சிலை..

பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்த ஆதரவாளர்கள் கார்களில் பின் தொடர்ந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல் வழியாக வந்த அழகிரி, நெல்பேட்டை பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

பெரியார் சிலை..

பெரியார் சிலை..

பின்னர் அங்கிருந்து வைகை புதுப்பாலம் வழியாக கோரிப்பாளையம் சென்றார். அங்கு யானை, குதிரைகள் முன் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கோகலே சாலை வழியாக அழகர்கோவில் சாலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சாரட் வண்டியில் அழகிரி- சாரதியாக மன்னன்

சாரட் வண்டியில் அழகிரி- சாரதியாக மன்னன்

அங்கே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். பின்னர் அங்கே அவருடைய ஆதரவாளர்கள் குதிரை சாரட் வண்டியை தயாராக வைத்திருந்தனர்.

அதில் அழகிரி, அவருடைய மகன் துரை தயாநிதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அந்த வண்டியை முன்னாள் துணை மேயரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான மன்னன் ஓட்டிச் சென்றார். அப்போது அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

மதுரையை மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அழகிரியின் பிறந்த நாள் அமர்க்களம்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+