எச். ராஜாவுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு- பரபர அரசியல் களம்!
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை மு.க. அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

காரைக்குடி: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக. இந்த நிலையில் திடீரென தம்முடைய மணிவிழாவுக்கு வருமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் எச். ராஜா.

இதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலினும் எச். ராஜாவின் மணிவிழாவுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். இந்த நிலையில் இன்று திடீரென ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி எச்.ராஜாவை காரைக்குடியில் சந்தித்து பேசியிருக்கிறார்.
ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கலகலக்க வைத்துவிட்டது டெல்லி. இதையடுத்து திமுகவுக்குதான் டெல்லி குறிவைக்கும் என கூறப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்களே இதை பகிரங்கமாக பேசியும் வருகின்றனர்.
இந்நிலையில் எச். ராஜாவுடன் மு.க. அழகிரி திடீரென சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்கும் அழகிரியின் இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் எச்.ராஜாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே அழகிரி சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications