மதுரையில் ரஜினிகாந்த்தின் முதல் அரசியல் மாநாடு?.. மு.க. அழகிரி முழு சப்போர்ட்??.. பரபரக்கும் களம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் கட்சியின் முதலாவது மாநாட்டை மதுரையில் நடத்துவார் என்றும் இதற்கு மு.க. அழகிரி முழு ஆதரவு தருவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மீண்டும் அக்கட்சியில் இணைய விரும்பினார். இதற்காக தமது பலத்தை காட்டவும் முயற்சித்தார்.

ஆனால் திமுக தலைமை மு.க. அழகிரியை மீண்டும் இணைப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. அதேநேரத்தில் மு.க. அழகிரி வேறு எந்த கட்சிக்கும் சென்றுவிடாத வகையில் சமாதான செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

அழகிரி தரப்பைப் பொறுத்தவரையில் திமுகவின் அறக்கட்டளைகளில் ஒன்றில் தங்களுக்கும் இடம்வேண்டும் என்பதுதான். ஆனால் இதனை ஸ்டாலினின் கிச்சன் கேபினட் நிராகரித்து வருகிறது. தற்போது தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அழகிரி மெல்ல மெல்ல திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்.

தீவிர அரசியலில் ரஜினி

தீவிர அரசியலில் ரஜினி

தேர்தல் நேரம் நெருங்கும் நிலையில் அழகிரியால் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அக்கட்சி தலைமை கருதுகிறது. இதனால் மீண்டும் சமாதானப் பேச்சுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்டு வருகிறார்.

மதுரையில் முதல் மாநாடு

மதுரையில் முதல் மாநாடு

அவரது கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மு.க. அழகிரி முழு ஆதரவு தருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் பெருமளவு இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அழகிரி தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஆதரவாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

பாஜக வியூகம்

பாஜக வியூகம்

வடதமிழகத்தில் பாமக, தென் தமிழகத்தில் மு. க. அழகிரி என கை கோர்த்துக் கொண்டு இயங்கினால் திமுக ஆட்சிக்கு வருவதை எளிதில் தடுக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். இதனை செயல்படுத்தும் வகையில்தான் மு.க. அழகிரியின் ஆதரவுடன் ரஜினிகாந்த் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+